shadow

   balachandarஇயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா: பாலசந்தர் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரையுலகில் அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது”

balachandar 3

திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் அவர் கூறுகையில், ”இயக்குநர் கே.பாலச்சந்தரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

balachandar 4

கே.பி.யை இழந்ததால் என்னையே நான் இழந்ததாக வருந்துகிறேன். கே.பாலச்சந்தர் என்னை ஒரு நடிகராக பார்த்ததைவிட மகனாகவே பார்த்தார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சரத்குமார், ஒய்.சி.மகேந்திரன், நடிகை ராதிகா  உள்பட திரையுலகினர் பலரும் இயக்குனர் கே.பாலச்சந்தரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

balachandar 1

அதேபோல், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர்கள் முத்துராமன், சமுத்திரகனி, சேரன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

balachandar 2

Leave a Reply