shadow

ரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டில் ‘கண்ணபிரான்”

kannapiranசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் மலேசியாவில் தொடங்கவுள்ளது. இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

முதலில் இந்த படத்திற்கு ‘காளி’ என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. முள்ளும் மலரும் படத்தில் ரஜினி, ‘காளி’ என்ற கேரக்டரில்தான் நடித்திருந்தார். எனவே இந்த படத்திற்கு ‘காளி’ என்ற டைட்டிலை ரஞ்சித் வைக்க விரும்பியதாக கூறப்பட்டது. ஆனால் ரஜினி நடித்த ‘காளி’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது ஒருசிலர் தீவிபத்தில் மரணம் அடைந்துவிட்டதால் செண்டிமெண்டாக அந்த பெயரை ரஜினி விரும்பவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‘கண்ணபிரான்’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரஜினியின் சம்மதத்திற்காக படக்குழுவினர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த டைட்டில் தற்போது இயக்குநர் அமீரிடம் இருப்பதாகவும் ரஜினி இந்த டைட்டிலுக்கு ஒப்புக்கொண்டவுடன், விரைவில் அவரிடம் ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply