shadow

இந்தியிலும் ரீமேக் ஆகிறது ‘பிரேமம்’

சாய்பல்லவி நடித்த ‘பிரேமம் ‘ என்ற சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகிறது.

மலையாளத்தில் நிவின்பாலி நடித்த கேரக்டரில் அர்ஜூன்கபூர் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அபிஷேக் கபூர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர்கள் கேரக்டரில் நடிக்க மூன்று முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த செய்தி விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply