குவியும் பாராட்டுக்கள்

ஊரடங்கு காரணமாக கஷ்டத்தில் இருக்கும் உதவி இயக்குனர்கள், நலிந்த கலைஞர்கள் 1500 பேருக்கும், சினிமாத்துறை சார்ந்த சங்கங்களுக்கும் சுமார் 24 டன் எடை உள்ள அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழங்கினார்

இதுகுறித்து இயக்குனர் சங்கம் ரஜினிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அன்பிற்கும்‌ பாசத்திற்கும்‌ உரிய ரஜினி சார்‌ அவர்களுக்கு,

இன்றைய கோவிட்‌ 19 வைரஸ்‌ எதிர்ப்பில்‌ தொழில்‌ இன்றி வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும்‌ உங்கள்‌ கலைக்குடும்பம்பத்தின்‌ இயக்குநர்கள்‌ சங்க உறுப்பினர்களுக்கு தாங்கள்‌ இன்று அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள்‌ கிடைக்கப்பெற்றோம்‌.

குறிப்பறிந்து, கேட்காமலே, உங்கள்‌ கலைக்குடும்ப சகோதரர்களுக்கு வாரி வழங்கும்‌ தங்கள்‌ கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள்‌ இல்லை. போற்றுகிறோம்‌. தங்கள்‌ நலமும்‌ புகழும்‌ உயரட்டும்‌ குடும்பம்‌ நீடூழி வாழட்டும்‌…

இயக்குனர் சங்கத்தினர் எந்தவித உதவியும் கேட்காமலேயே உதவி செய்த ரஜினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply