இமயமலையை அடுத்து அமெரிக்காவுக்கு செல்கிறார் ரஜினிகாந்த்

சமீபத்தில் இமயமலைக்கு சென்று திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர் உடல் பரிசோதனை செய்துகொள்வதுடன் அமெரிக்காவில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வரும் 25ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து கொண்டே வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் உரையாடுவார் என்றும், இந்த கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை ரஜினிகாந்த் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த மாதம் சென்னை திரும்பும் ரஜினிகாந்த், ‘காலா’ படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்வார் என்றும் கால படம் ரிலீசாவதற்கு முன்பே அவர் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *