shadow

லிங்காவுக்கு 60, கபாலிக்கு 50, ‘2.0’க்கு 45. இது என்ன கணக்கு தெரியுமா?

kabaliசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி சுமார் 500 கோடி ரூபாய் வசூலாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த ரஜினிக்கு சம்பளமாக கலைப்புலி எஸ்.தாணு எவ்வளவு தந்திருப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்காக ரஜினி எத்தனை கோடி கேட்டாலும் தருவதற்கு தாணு தயாராக இருந்தபோதிலும், ரூ.50 கோடி மட்டுமே ரஜினி பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரஜினியின் முந்தைய படமான ‘லிங்கா’ சுமாராக வசூல் செய்த நிலையிலும் அவர் ரூ.60 கோடி அந்த படத்திற்காக சம்பளம் பெற்றிருந்தார். ஆனால் தற்போது ரஜினியிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், கபாலி’க்காக ரூ.50 கோடியும், ‘2.0’ படத்திற்காக ரூ.45 கோடியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply