shadow

அஜீத் ஸ்டைலில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரஜினி?

kabaliசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘கபாலி’ படத்தின் போட்டோஷூட் நேற்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த போட்டோஷூட்டில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டோஷூட்டின்போது ரஜினிக்கு சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் விக் வைக்கப்பட்டதாகவும், வெள்ளை தாடியுடன் கூடிய அவரது தோற்றம் கம்பீரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் ஒரிஜினல் வெள்ளைத்தாடியுடன் அஜீத் ஸ்டைலில் சால்ட் அண்ட் லுக்கை பார்க்க அட்டகாசமாக இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் கலையரசனும் ரஜினியின் லுக்கை தனது டுவிட்டரில் புகழ்ந்துள்ளார்.

மேலும் ராதிகா ஆப்தே சேலை கட்டி இரண்டு மூக்குத்திகள் அணிந்து கடந்த 80களில் உள்ள கெட்டப் போன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் ‘கபாலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளது என கூறப்படுகிறது.

Leave a Reply