shadow

‘8 தோட்டாக்கள்’ இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் இயக்கிய படங்களை பார்த்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் பாராட்டிய இன்னொரு இயக்குனர் ஸ்ரீகணேஷ். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினி அலுவலகத்தில் இருந்து ‘8 தோட்டாக்கள்’ படத்தை பார்க்க விரும்புவதாக அப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷுக்கு ஒரு மெயில் வந்ததாகவும், இதன் காரணமாக அவருக்காக ஒரு சிறப்பு காட்சியை இயக்குனர் ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பின்னர் நேற்று திடீரென ரஜினியிடம் இருந்து போன் அழைப்பு வந்தபோது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று கூறிய ஸ்ரீகணேஷ், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் கதை சொன்ன விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி பாராட்டியதாக கூறினார். குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர், நாசர் கேரக்டர் குறித்து ரஜினி பாராட்டியதாகவும், அவரிடம் பேசிய அந்த ஒரு நிமிடம் தனக்கு பிரமிப்பாக இருந்ததாகவும் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார்

‘8 தோட்டாக்கள்’ வெற்றியை அடுத்து ஸ்ரீகணேஷ் தற்போது அதர்வா நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply