shadow

மலேசிய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்
kabali  10
அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மலேசிய ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாக ரஜினிகாந்த் திடீரென அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

சமீபத்தில் மலேசிய ரசிகர்கள் முன் உரையாற்றிய ரஜினி, மலேசியாவில் உள்ள தனது ரசிகர்கள் இந்த அளவுக்கு மென்மையானவர்கள் என நான் நினைக்கவில்லை என்றும், ஒவ்வொரு ரசிகரும் தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் ஒவ்வொரு ரசிகர்களுடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து கொள்ள முடியாததற்காக தான் வருந்துவதாகவும், ஒவ்வொருவருடனும் தனியாக புகைப்படம் எடுத்து கொள்வது என்பது முடியாத ஒன்று என்பதால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் ரஜினி தெரிவித்தார்.

ரஜினியின் பெருந்தன்மையை பார்த்து மலேசிய ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary: Rajinikanth apology to Malaysia fans

Leave a Reply