shadow

நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லவே இல்லையே! ரஜினி திடீர் பல்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை, வரும் 31ஆம் தேதி எனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

நான் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்று மக்களை விட ஊடகங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. வழக்கமாக என்னுடைய பிறந்தநாளை தனிமையில் தான் கொண்டாட நினைப்பேன், இந்த முறை அதிக ரசிகர்கள் என்னுடைய வீட்டின் முன் வந்திருந்தனர், அவர்களை நான் பார்க்க முடியவில்லை மன்னித்து விடுங்கள். இப்போது தேர்தலா வந்துவிட்டது? போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன், போர்னா தேர்தல் தான். இப்போது என்ன போர் வந்துவிட்டதா? ஆனால் சீன் போடுகிறார் ரஜினி, அரசியல் அறிவிப்பை இழுக்கிறார் என்று சொல்கின்றனர். ஏன் தயங்குகிறேன்? அரசியலுக்கு நான் புதிததல்ல 1996 முதலே அரசியலில் இருக்கிறேன். அரசியலில் என்ன கஷ்ட நஷ்டம், அதன் ஆழம் என்ன என்று தெரிந்ததாலேயே தயங்குகிறேன். ஜெயிக்க வீரம் மட்டும் போதாது தெரியவில்லை என்றால் ஓகே என்று எப்போதோ வந்திருப்பேன். யுத்தத்திற்கு போனால் ஜெயிக்கணும். ஜெயிக்ணும்னா வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும் புத்தியை பயன்படுத்த வேண்டும். அரசியல் நிலைப்பாடு? நான் அரசியலுக்கு வருவதை என்னுடைய அண்ணன் தான் தடுக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன்

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Leave a Reply