கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இருவருமே கோழைகள். சுப்பிரமணியன் சுவாமி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே கோழைகள் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ‘நடிகர் கமல்ஹாசனைப் பொறுத்தவரை அகங்காரம் பிடித்த முட்டாள். ரஜினிகாந்த் இலங்கைக்கு பயந்து கொண்டு அங்கு செல்வதை ரத்து செய்து விட்டார். ஒரு நிகழ்ச்சியின் அழைப்பிதழை ஏற்றுக்கொள்ளும் போது அனைத்தையும் பற்றி யோசிக்க வேண்டும்.

அதன் பிறகு தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். சினிமாக்காரர்களுக்கு எப்பவும் பயம் தான். இதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கோழைகள் என்று சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார். இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்ததைத் தொடர்ந்து வைகோ, திருமாவளவன் ஆகியோர், ரஜினிகாந்த் இலங்கை போகாமல் பயந்து போய் அறிக்கை விடுகிறார் என்று கூறியுள்ளார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *