shadow

அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் யாரும் ஈடுபடக் கூடாது என்று ரஜினிகாந்த் அறிவுறுத்தி உள்ளார். இந்த அறிவுரையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவது, விமர்சனங்களுக்கு எதிராக அறிக்கை விடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தனிநபர் தாக்குதல், மற்ற கட்சிகளை விமர்சிப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் யாரும் ஈடுபடக் கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது ஆதாரத்தோடு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களுகு பதிலாக மன்றங்களின் செயல்பாடு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ரசிகர்கள் ஈடுபட வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல்லும் நாளைய காலா இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் தேதி மற்றும் ஒருசில முக்கிய அறிவிப்புகளை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply