இரவு 2 மணிக்கு அவசர அவசரமாக கமல் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த்

உலக நாயகன் கமல்ஹாசன் அலுவலகத்தில் இன்று கே பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்

இந்த விழாவில் அவர் பேசியதாவது: கமலஹாசன் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தை நான் இரவு 11 மணிக்கு பார்த்தேன். இரண்டு மணிக்குத்தான் படம் முடிந்தது

படம் முடிந்ததும் உடனடியாக நான் கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என்று கூறினேன். அவர் தற்போது தூங்கிக் கொண்டிருப்பார் என்று அனைவரும் கூறிய போதும் நான் விடாப்பிடியாக கமலஹாசன் வீட்டிற்குச் சென்று அவரை எழுப்பி அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்ததை அவரிடம் தெரிவித்து அவருக்கு பாராட்டு தெரிவித்து விட்டு தான் வீட்டுக்கு வந்தேன்

அந்த படத்தை பார்த்த பிறகு எனக்கு உடனே அவரை பாராட்ட வேண்டும் என்று தோன்றியதால் அவ்வாறு செய்தேன் என்று ரஜினிகாந்த் கூறினார்

மேலும் தான் அடிக்கடி பார்க்கும் படங்கள் மூன்றே மூன்று என்றும் அவை காட்பாதர், திருவிளையாடல் மற்றும் ஹேராம் என்றும் கூறிய ரஜினி, ஹேராம் போன்ற ஒரு படத்தை கமலஹாசனை தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்

Leave a Reply