shadow

ரஜினி-அனிருத் திடீர் சந்திப்பு. ‘ரஜினி 161’ இசையமைப்பாளரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே திறமையான இளைஞர்களுக்கு மதிப்பு அளிக்கக்கூடியவர்கள். அறிமுக இயக்குனர்கள், அறிமுக நடிகர்களின் படங்களுக்கு வாழ்த்து கூறுவதில் எவ்வித தயக்கமும் இல்லாதவர். சமீபத்தில் கூட ‘குற்றம் 23’, ‘மாநகரம்’ படங்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்

இந்நிலையில் இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் ரிகார்டிங் ஸ்டுடியோவுக்கு ரஜினி நேற்று மாலை திடீர் விசிட் அடித்தார். இதை அனிருத்தே கூட எதிர்பார்க்கவில்லை. நெருங்கிய உறவினராக இருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் இந்த விசிட்டில் வேறு அர்த்தம் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

‘2.0’ படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள ரஜினியின் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசுவதற்காகவே அனிருத்தை ரஜினி சந்தித்ததாக கூறப்படுகிறது.

ரஜினி-ரஞ்சித் படத்தை தனுஷ் தயாரிப்பாக இருந்தாலும் ரஜினி சொன்னால் தனுஷ் மறுக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply