நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் தங்களது டுவிட்டரில் கூறியதாவது:

கமல்ஹாசன்: டிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு

ரஜினிகாந்த்: சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ‘சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *