இயக்குனர் விசு மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல திரைப்பட இயக்குனர் விசு இன்று மாலை 4,30மணிக்கு காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, உட்பட பல குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்து மக்கள் மனதை கவர்ந்த இயக்குனர் விசு அவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது டுவிட்டரில் விசு அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினியுடன் ‘நல்லவனுக்கு நல்லவன், ‘மிஸ்டர் பாரத்’, ‘மன்னன்’, ‘உழைப்பாளி’ போன்ற படங்களில் விசு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply