அதிசயமும் நடக்கும், அற்புதமும் நடக்கும்: கமல் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

தமிழக அரசியலில் நாளை அதிசயமும் நடக்கும், அற்புதமும் நடக்கும் என கமல்ஹாசன் 60’ விழாவில் ரஜினிகாந்த் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்று சென்னையில் நடைபெற்ற ‘கமல்ஹாசன் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது; தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நான்கு மாதம் அல்லது ஐந்து மாதத்திற்கு மேல் நீடிக்காது என்று 99 சதவிகித மக்கள் கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன? இன்று ஆட்சி தொடர்கிறது. அதிசயம் அற்புதம் நடந்ததால் அவரது ஆட்சியும் நீடித்துக் கொண்டே இருக்கின்றது

நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது போல், இன்றும் அதிசயம் அற்புதம் நடந்து வருகிறது. அதேபோல் நாளையும் அதிசயம் அற்புதம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியவுடன் விழா மேடையே அதிர்ந்தது. இந்த விழா கமல்ஹாசன் விழாவாக இருந்தாலும் முழுக்க முழுக்க ரஜினியின் கட்டுப்பாட்டுகுள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *