’தர்பார்’ தோல்வி எதிரொலி: சம்பளத்தை பாதியாக குறைத்த ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் அந்தப் படம் அதிக வசூல் செய்யப்பட்ட போதிலும் படத்தின் பட்ஜெட் அதிகம் என்ற காரணத்தால் விநியோகிஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது

இதனை அடுத்து விநியோகிஸ்தர்கர்கள் ரஜினி வீட்டு முன் கூடி நஷ்ட ஈடு வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர் இந்த நிலையில் ரஜினியின் அதிகமான சம்பளம் தான் படத்தின் நஷ்டத்திற்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் ’தலைவர் 168’ படத்தில் சம்பளத்தை குறைக்குமாறு ரஜினியிடம் கேட்டுக் கொண்டதாகவும் இதனை அடுத்து ரஜினி தனது சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது

முன்னதாக ரஜினிக்கு சம்பளம் ரூபாய் 118 கோடி என்று பேசப்பட்ட நிலையில் தற்போது ரூபாய் 58 கோடி மட்டுமே அவருடைய சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதேபோல் மற்ற நடிகர்களும் தங்களுடைய சம்பளத்தை பாதியாக குறைத்தால் படத்தின் பட்ஜெட் குறையும் என்றும் விநியோகிஸ்தர்கர்கள் தயாரிப்பாளர்கள் லாபம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply