shadow

ரஜினி படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல். திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்குமா?

kaaliஅட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘காளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. தற்போது இந்த தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மலேசியாவில் நடத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அனைத்து ஏற்பாடுகளையும் தயாராக வைத்திருந்தார். ஆனால் திடீரென தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால், இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாக தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு, தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும் இருப்பதால், கண்டிப்பாக இந்த படம் வேலைநிறுத்தம் முடியும் வரை தொடங்க வாய்ப்பே இல்லை. என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் வயதான ‘டான்’ ஆக நடிக்கவுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்பட பலர் நடிக்கவுள்ள நடிக்கவுள்ளனர். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘சந்திரமுகி’ படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் ரஜினியின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் அவர் சிறப்பு வேடத்தில் நடித்த ‘குசேலன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

Leave a Reply