ரஜினி-கமல் மீண்டும் இணைய திட்டம்

kamal_rajini copyசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தை கோலிவுட்டில் கிட்டத்தட்ட அனைவருமே பார்த்துவிட்டாலும், ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் இன்னும் பார்க்கவில்லை.

சமீபத்தில் கமல் அவரது அலுவலக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நண்பர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் அவருக்காக ‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சிக்கு ரஜினி ஏற்பாடு செய்துள்ளதாகவும் மிக விரைவில் கமல்-ரஜினி இருவரும் இணைந்து ‘கபாலி’ படத்தை பார்க்கவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஓய்வு மற்றும் மருத்துவ சோதனை ஆகியவற்றை முடித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த் ஆகஸ்ட் முதல் வாரம் முதல் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *