shadow

rajiniஇளையதளபதி விஜய் நடித்த இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் விஜய்க்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவருமான இயக்குனர் ஒருவர் அஜீத் நடித்தால் மட்டுமே படம் இயக்குவேன் என்று அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக், விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ், காவலன் ஆகிய 2 படங்களை இயக்கியவர். இவர் சமீபத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தை இயக்கினார். கேரளாவில் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தை அவர் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். இதுகுறித்த ஆலோசனையில் அவர் கலந்து கொண்டபோது, மம்முட்டி கேரக்டரில் ரஜினி அல்லது அஜீத் நடித்தால் மட்டுமே இந்த படம் தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக அவர் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரஜினி அடுத்த மாதம் முதல் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதால், அஜீத்திடம் இந்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. அஜீத் ஒப்புக்கொண்டால் மட்டுமே தமிழில் இந்த படத்தை இயக்குவார் என்றும் இல்லையெனில் இந்தி மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகளை முடித்துவிட்டு பின்னர் தமிழ் ரீமேக் பணியை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அவர் விஜய்யை பரிசீலனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply