rajini muruganநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை லிங்குசாமி தயாரித்து வருகின்றார்.

இந்த படத்தின் சிவகார்த்திகேயன் டீக்கடை ஓனராக நடித்து வருவதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த படத்தில் இதுவரை யாரும் தைரியமாக ஏற்று நடிக்காத ஒரு வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக கூறப்பட்டது. ரகசியமாக வைத்திருந்த இந்த பிச்சைக்காரன் கெட்டப்பின் புகைப்படம் ஒன்று இன்று திடீரென இணையத்தில் ரிலீஸ் ஆகி வெகுவேகமாக பரவி வருகின்றது.

இந்த கெட்டப் வெளியானதால் ‘ரஜினி முருகன்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படக்குழுவினர்களிலேயே ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்த கெட்டப் எப்படி லீக் ஆகியது என்பது தெரியாமல் படக்குழுவினர் குழம்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.;

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *