உள்ளாட்சி தேர்தலில் கமல் கட்சிக்கு ஆதரவு? ரஜினிகாந்த் அறிக்கை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது

ஆனால் திமுக தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு சென்று இது குறித்து வழக்கு தொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த தேர்தல் திட்டமிட்டு நடக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தனது தனது ஆதரவு யாருக்கும் இல்லை என ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இருந்து அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நமது அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மன்றத்தின் பெயரிலோ ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ மக்கள் மன்றத்தின் கொடியோ தலைவரின் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிக்கையை அடுத்து கமல் கட்சிக்கும் ரஜினி ஆதரவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது

Leave a Reply