ஜெயலலிதாவின் சாதனைகளை ரஜினி முறியடிப்பாரா?: மணி சங்கர் ஐயர்

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை நிரப்ப ரஜினி, கமல் உள்பட பலர் முயற்சித்து வரும் நிலையில் ஜெயலலிதாவுக்கு மாற்றாகவும், அவருடைய சாதனைகளை முறியடிப்பவருமாக ரஜினி இருப்பாரா? என்ற தலைப்பில் சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் பேசினார்.

புதிய திட்டங்களுடன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர். ஆனால், அவர்கள் இருவரும் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்றும், ஜெயலலிதாவுக்கு மாற்றாக ரஜினிகாந்த் இருக்க முடியாது என்றும் அவர் பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முன்னாள் முதலமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *