ரஜினிக்கு அழைப்பு விடுக்க அதிமுக மேலிடம் திட்டமா?

rajini admkசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்க அடிப்படை பணிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அதிமுகவில் இணைவார் என்று கடந்த சில நாட்களாக வதந்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவில் இணையுமாறு ரஜினிக்கு அழைப்பு விடுக்க அதிமுக மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு அதிமுகவின் தலைமை பொறுப்பு பதவி அளிக்க தயார் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவில் இன்னும் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருப்பதால் அந்த பதவியை ரஜினிக்கு அளிக்க அதிமுக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும், ரஜினி தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடும் என்றும் டுவிட்டரில் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *