shadow

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய அதிரடி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து சமூக வலைதளங்களை பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, சிறுத்தை சிவா, டி.இமான் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க இருப்பதாகவும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முற்றிலும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *