25 வருடங்களாக தீபாவளியன்று ரஜினியிடம் இருந்து துணி பெறும் பிரபலம்

Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உலக நாயகன் கமல்ஹாசனுடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனுக்கு கடந்த 25 வருடங்களாக தீபாவளிக்கு புதுத்துணியை ரஜினி வழங்கி வருவது தற்போது தெரிய வந்துள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் ரஜினியும், சாருஹாசனும் முதன்முதலில் இணைந்து நடித்தனர். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் குடும்ப அளவில் நெருங்கி பழகியதாகவும் அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு தீபாவளிக்கு ரஜினி புத்தாடை வழங்கி வருவதாகவும் சாருஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சாருஹாசன் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: ‘எனக்கு தீபாவளி போன்ற மத பண்டிகையில் நம்பிக்கையில்லை… ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி எனக்கும் என் மனைவிக்கும் துணிமணி தீபாவளிக்கு அனுப்புகிறார் …. அவரை ஏன் நான் குறைத்து பேசவேண்டும் …? காராணமில்லாமல் புகழ் வருவதும் ஆதாயமில்லாமல் அய்யங்கார் ஆற்றோடு போவதும் நடக்காத காரியங்கள். இவ்வாறு சாருஹாசன் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *