shadow

Rajinikanthதமிழக பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த முக்கிய நடிகர்களை கட்சியில் சேர்க்க தமிழக தலைவர்களுக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாரதிய ஜனதாவில் பொதுமக்களை கவரும் கவர்ச்சியான தலைவர்கள் இல்லை. மேலும் கூட்டணி கட்சிகளான தேமுதிக, மதிமுக மற்றும் பாமகவினால் எந்த பயனும் இல்லை என்று பாஜக மேலிடம் கருதுகிறது. எனவே தமிழகத்தில் பாஜகவை வலிமைப்படுத்த முக்கிய நடிகர்களை கவர்ந்து அவர்களுக்கு பதவி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக ரஜினிக்கு பாரதிய ஜனதாவின் சார்பில் ராஜ்யசபா பதவி கொடுத்து அவரை பாரதிய ஜனதாவின் தமிழக தலைவராக்க மேலிடம் விரும்புகிறது. ஆனால் இதற்கு ரஜினி ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. இதுகுறித்து ரஜினியிடம் பேசுமாறு பிரபல பத்திரிகை ஆசிரியரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் கூறப்பட்டுள்ளது.

ரஜினியை அடுத்து விஜய்யை பாரதிய ஜனதாவில் சேர்க்க கட்சி மேலிடம் விரும்புகிறது. விஜய் இரண்டு திராவிட கட்சிகளாலும் அலைக்கழிக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக அவர் கட்சியில் சேருவார் என்றும், அவ்வாறு அவர் சேர்ந்தால் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கவும், பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் அவரிடம் நேரில் பேசியுள்ளார்

வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரையும் கட்சியில் சேர்த்து இரண்டு திராவிட கட்சிகளுக்கும் பெரும் சவால் கொடுக்க பாஜக இப்போதே தயாராகி வருகிறது.

Leave a Reply