shadow

madrasஅட்டகத்தி’என்றா முதல் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றா இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கார்த்தி, கேத்ரின் தெரஸா நடித்த ‘மெட்ராஸ்’ திரைப்படம் தற்போது தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

’பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடிப்பில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு படம் வெளிவந்தது என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்க முடியும். கார்த்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் மெட்ராஸ் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி படம் பார்த்ததும், இயக்குநர் ரஞ்சித்தைப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் ரஞ்சித் ட்விட் செய்துள்ளார். ‘கலக்கிட்ட, எப்படி கண்ணா இப்படி ஷூட் பண்ண , சூப்பர் கண்ணா’ என ரஜினி பாராட்டியதாக தெரிவித்துள்ளார் ரஞ்சித்.

Leave a Reply