shadow

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி விரைவில் நியமனம்

rajeshதமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சந்தீப் சக்சேனா இந்திய தேர்தல் துணை கமிஷனராக பதவி உயர்வு பெற்ற நிலையில் புதிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக  ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என கூறப்படுகிறது.

புதிய தலைமை தேர்தல் அதிகாரிக்கு மூன்று அதிகாரிகளை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ததாகவும், இந்த பட்டியலில் இருந்து ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராஜேஷ் லக்கானி தற்போது தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் முதன்மை செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Rajesh Lakkani appointed as new chief election commissioner of TAmilnadu

Leave a Reply