shadow

jayasudhaமிகவும் பரபரப்பாக நடைபெற்ற தெலுங்கு நடிகர் சங்கத்தலைவர் தேர்தலில் நடிகர் ராஜேந்திர பிரசாத் 85 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை ஜெயசுதாவை தோற்கடித்தார். செயலாளர் பதவிக்கும் ராஜேந்திர பிரசாத்தின் ஆதரவாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் 29ஆம்தேதி நடந்த தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக நடிகர் கல்யாண் ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் நடிகர் கல்யாணின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இன்று காலை நடந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த ராஜேந்திர பிரசாத்  237 ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகை ஜெயசுதாவுக்கு 152 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. இதனால் ராஜேந்திர பிரசாத் 85 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முன்னதாக இந்த தேர்தலில் ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி தனது முழு ஆதரவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *