shadow

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுவிலக்கு: குறுக்கு வழியை கண்டுபிடித்த ராஜஸ்தான் அரசு

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்புகளில் ஒன்று, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு இடையேயான குறைந்தபட்ச தொலைவு 500 மீட்டர் என்பது. இந்த உத்தரவு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் 500 மீட்டர் இடைவெளிக்குக் குறைவான தொலைவில் உள்ள மதுக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மத்திய அரசு மற்றும் சில மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் வசிக்கும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் 220 மீட்டர் இடைவெளிகளில் மதுக்கடைகள் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது
இந்த அனுமதியை தவறாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு முயன்று வருவதாக மதுவிலக்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதாவது ராஜஸ்தான் மாநில அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மீற ஒரு குறுக்குவழியை கண்டுபிடித்துள்ளதாம். மாநில நெடுஞ்சாலைகளை நகரச்சாலைகளாக பெயர் மாற்ற அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளதாகவும், அவ்வாறு மாற்றிவிட்டால் மதுவிற்பனைக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறுக்காக இருக்காது என்றும் திட்டமிட்டுள்ளதாம்

ஒரு மாநில அரசே உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குறுக்கு வழியில் செயல்படுவது ஈனத்தனமான செயல் என்று அம்மாநில மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply