mallikaமுன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் சிறை செல்ல காரணமாக இருந்த ‘பன்வாரி தேவி’ வழக்கை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள மல்லிகா ஷெகாவத் நடித்த  ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மல்லிகா ஷெராவத் கவர்ச்சியின் எல்லை வரை சென்று நடித்த திரைப்படமான தி டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற கட்டிடத்தின் முன் சில காட்சிகளை படக்குழுவினர் படமெடுத்துள்ளனர். அந்த காட்சிகளின் பின்னணியில் சட்டசபை கட்டிடம் தெரிகிறது. ஆனால் இதற்கு ராஜஸ்தான் அரசிடமோ, சட்டசபை அலுவலர்களிடமோ எவ்விதமான அனுமதியையும் படக்குழுவினர் பெறவில்லை என தெரிகிறது.,

எனவே இந்த படத்தின் இயக்குனர் கே.சி. பொகாடியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து சட்டசபையில் இன்று பேசிய மந்திரி ரத்தோர், ‘கலெக்டரிடமோ, போலீஸ் கமிஷனரிடமோ முன் அனுமதி வாங்காமல் ‘விதான் சபா’ கட்டிடத்தை வெளியிலிருந்து படம் பிடித்த குற்றத்திற்காக திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும், ராஜஸ்தான் திரைப்பட படப்பிடிப்பு சட்டம், தேசிய சின்ன சட்டம் மற்றும் பெயர் சட்டம் என்று எந்த சட்டத்தையும் இயக்குனர் பின்பற்றவில்லையென்றும், அவரது இந்த செய்கை, விதான் பவனின் கவுரவத்தை காயப்படுத்திவிட்டதாகவும், அதன் கண்ணியத்தை குலைத்து விட்டதாகவும் ரத்தோர் குறிப்பிட்டார்.

எனவே மல்லிகா ஷெகாவத் உள்பட படக்குழுவினர்களில் முக்கியமானவர்கள் கைது செய்யப்படலாம் என பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *