shadow

பணத்தை அடுக்கி வைத்ததில் கோளாறு. அள்ளி வழங்கிய ஏ.டி.எம் இயந்திரத்தால் பரபரப்பு
ATM-Machine
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் ஒன்றில் பணத்தை அடுக்கி வைத்ததில் கோளாறு ஏற்பட்டதால் ஐந்து மடங்கு பணம் அதிகமாக வந்ததாகவும், இதன் காரணமாக அந்த ஏ.டி.எம் மூடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள அஜித்கார் நகரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.100 நோட்டுக்கள் அடுக்கி வைக்கப்படும் இடத்தில் தவறுதாக ரூ.500 நோட்டு அடுக்கி வைக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக இந்த இயந்திரத்தில் பணம் எடுத்த வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மடங்கு பணம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும், அந்த ஏ.டி.எம் மையம் உடனடியாக மூடப்பட்டது. ஏ.டி.எம் எந்திரத்தின் கோளாறு கண்டுபிடிக்கும் வரை எவ்வளவு பணம் தவறுதலாக எடுக்கப்பட்டுள்ளது, அவை எப்படி மீட்கப்படும் போன்ற விவரங்களை அந்த வங்கி விரைவில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Rajasthan ATM dispenses five times extra cash due to erroneous loading

Leave a Reply