சந்திரிக்கா ஓர் செல்லாக்காசு. ராஜபக்சே ஆவேச பேட்டி

rajapakseகடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே, தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்காக போட்டியிடுகிறார். ராஜபக்சேவை பல வருடங்களாக எதிர்த்து வரும் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கா, பெரிய அளவில் மோசடிகளில் ஈடுபட்டு நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற ராஜபக்சேவை இந்த தேர்தலிலும் தோற்கடிக்க வேண்டும் என்று நேற்று அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சந்திரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ராஜபக்சே, “சந்திரிக்கா பண்டாரநாயக்க குரோத உணர்வுடன் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வாறான அறிக்கைகள் கருத்துக்கள் மூலம் எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

சந்திரிக்கா யார் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். சந்திரிக்கா ஓர் செல்லாக்காசு. சந்திரிக்காவிற்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டுமாயின் எனது செயலாளரின் ஊடாகவே பதிலளிக்க வேண்டும். எனினும் இன்னும் கொஞ்சம் நன்றாக சிந்தித்து சந்திரிக்காவின் அறிக்கைக்கு பதிலளிப்பது குறித்து ஊடகங்களுக்கு கூறுகிறேன்” என்றார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *