ராஜா ராணி படத்தின் வெற்றிவிழாவில் நடித்த ஆர்யா, ஜெய், நயன்தாரா, இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தவிர்த்து ஆர்யாவின் நண்பர்கள் ஜெயம் ரவி, ஜீவா ஆகியோரும் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்திருந்தார். நயன்தாராவின் முதல் மற்றும் முன்னாள் காதலர் சிம்புவும் பார்ட்டிக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் இணைந்து தயாரித்த மூன்று படங்களில் இந்தப் படமே அதிக வசூலை பெற்றிருக்கிறது. ஆர்யா நடித்தப் படங்களிலும் வசூலில் இதற்குதான் முதலிடம். காதல் தோல்விக்குப் பின் நயன்தாரா நடித்த இரு தெலுங்குப் படங்களும் சுமாராகவே போயின. ராஜா ராணிதான் அவரது இரண்டாவது இன்னிங்ஸின் முதல் மற்றும் பெரிய வெற்றி. பொதுவாக பார்ட்டிகளில் ஒதுங்கி இருக்கும் நயன்தாரா எக்ஸ்ட்ரா உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஆர்யா முதல் அட்லிவரை பலருக்கும் கேக் ஊட்டினார்.

Leave a Reply