சமீபத்தில் ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கி வெளியான ராஜா ராணி படம் வெற்றி பெற்றதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நயன்தாரா பற்றி இயக்குநர் அட்லியிடம் கேட்டதற்கு நழுவி விட்டார்.

ராஜா ராணி வெற்றி பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்தளவு மிகப்பெரிய ஹிட் ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை. 1 வாரத்தில் 15 கோடி வசூல் செய்து தந்துள்ளது. இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் வந்து தியேட்டரில் பார்க்கிறார்கள். படத்தில் சண்டை, குத்துப்பாட்டு என எதுவுமே கிடையாது என்றார் இயக்குநர் அட்லி.

அப்போது படத்தின் நடித்திருக்கும் நயன்தாரா சிறப்பாக நடிக்க அவர் காதல் தோல்வி ஒரு காரணமா? என இயக்குநரிடம் கேட்டதற்கு உண்மைதான். அவர் சொந்த வாழ்க்கையிலும் காதல் தோல்வி நிகழ்துள்ளது. அவருடைய நடிப்பில் அந்த வேதனை தெரிந்ததை நான் உணர்ந்தேன் என்றவரிடம் அவர் பட சம்பந்தப்பட்ட எந்த விழாக்களுக்கும் வருவதில்லையே ஏன் என்றதற்கு?

அது அவருடைய தனிப்பட்ட விஷயம். என்னை பற்றி என்னிடம் கேட்டால் நான் பதில் சொல்வேன். பிறரை பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் தருவது என் நழுவிக்கொண்டார் அட்லி.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *