shadow

பெண்கள் பெட்டியை நடுவில் மாற்ற ரயில்வே துறை முடிவு

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் தற்போது பெண்களுக்கான பெட்டி கடைசியில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பெட்டியை நடுவில் மாற்றவும், பெண்கள் பெட்டியின் வண்ணத்தை மாற்றவும் ரயில்வே துறை ஆலோசித்து வருகிறது.

ரயில்களில் பெண்களுக்கான பெட்டி கடைசியில் இருப்பதால் அவசரக் காலங்களில் உடனடியாக உதவி கிடைக்காமல் போகிறதாகவும், இதனால் பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களாக கோரிக்கைகள் எழுந்து வந்தன

இதனை முன்னிட்டு பெண்கள் பெட்டியை எளிதில் அடையாளம் காணும் வகையில், ரயில் பெட்டிகளின் மற்றவற்றின் வண்ணத்தில் இருந்து இதற்கு வேறுபட்ட வண்ணத்தை பூசலாம் என்றூம் நீண்ட தூர மற்றும் புறநகர் ரெயில்கள் என அனைத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள், அனைத்து மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதுகுறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பரிந்துரைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply