சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் உருவான மேடி புயல் வடக்கு நோக்கி சென்று, பின்னர் வலுவிழந்து மீண்டும் தமிழகம் நோக்கி நகர்ந்து வந்துள்ளது. அது இப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து மேலும் வலு குன்றி தாழ்வுப்பகுதியாக தென்மேற்கு வங்கக்கடலில் வேதாரண்யம் அருகே உள்ளது.

வேதாரண்யம் அருகே அது கரையை கடக்கும். பின்னர் மேற்கு தென்மேற்காக நகர்ந்து மீண்டும் தமிழக கடற்கரையை அதிராம்பட்டினம் – பாம்பன் இடையே தொண்டிக்கு அருகில் இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்றும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இந்த வானிலை 14-ந்தேதி காலை வரை நீடிக்கும். அதன் பின்னர் படிப்படியாக மழை குறையும்.

இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply