தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். ரமணன்!

rainசென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்பே இன்னும் நீங்காத நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று ரமணன் தெரிவித்து உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்து உள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், கடலோர தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும். வடமாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்து,  தாழ்வு நிலையாக குமரி கடலில் உள்ளது என்றும் ரமணன்  தெரிவித்து உள்ளார்.

Rain will be continue for three days at Tamil Nadu and Pondicherry said Ramanan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *