shadow

சென்னையில் அடிச்சு தூக்கும் மழை: இன்று பள்ளிகள் விடுமுறையா?

அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறை, ஆகியவை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன

இந்த நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது

இன்று காலை முதல் சென்னை திநகர், நுங்கம்பாக்கம், அசோக் நகர், சூளைமேடு, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் பெரிய அளவில் மழை இல்லை என்பதால் இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *