shadow

சொன்னபடியே வெளுத்து வாங்கும் மழை: ஒரு வாரம் விடுமுறைக்கு வாய்ப்பு!

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழையும் சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வானிலை ஆய்வுமையம் சொன்னபடியே இன்று காலை முதல் சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, ஆழ்வார்ப்பேட்டை, தி.நகர், வடபழனி, எழும்பூர், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது

எனவே இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழையும் அதன்பின் இரண்டு நாட்களுக்கு மிதமான மழையும் சென்னையில் பெய்ய வாய்ப்பு இருப்பதால் கிட்டத்தட்ட ஒரு வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. சென்னையில் கனமழை பெய்யும் என்பதால் சென்னைவாசிகள் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *