சென்னையில் காலை முதல் மிதமான மழை! இன்று விடுமுறையா?

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் இன்று விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும் விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னையின் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தற்போது மிதமான மழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

அதேபோல் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply