shadow

rainவங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 6.3 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 14.3 மி.மீட்டர் மழையும் இரவில் பெய்துள்ளது. இன்றும் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில் காற்றழுத்த தாழ்வு வடக்கு நோக்கி நகர்வதால் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றார்.

கடலூர், மாவட்டத்தில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. பிற்பகல் முதல் தொடர்ந்து பெய்த மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.

கடலூர், பரங்கிப்பேட்டை பகுதியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள சுமார் 5 ஆயிரம் படகுகள் 2–வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

விழுப்புரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது.

புதுவையில் நேற்று பகல் முழுவதும் விட்டு, விட்டு மழை தூறியது. நள்ளிரவிலும் இதே நிலை நீடித்தது. இன்று அதிகாலையில் சிறிது நேரம் கனமழை பெய்தது. காலையில் மழை தூறிக்கொண்டேயிருந்தது.

Leave a Reply