shadow

அயோத்தியில் ராமர் கோவில் வடிவில் ரயில் நிலையம்: மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா

மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே ராமர் கோவில் விவகாரம் அவ்வபோது சூடுபிடித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா இன்று அளித்த பேட்டி ஒன்றில் அயோத்தியில் ராமர் கோவில் வடிவில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோய்த்தி நகரில், ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா அயோத்தி ரயில் நிலைய மறு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் மனோஜ் சின்ஹா பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது; அயோத்தி நகரில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.200 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ரயில் நிலையம் புனரமைப்புக்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இங்குள்ள பழைய ரயில் நிலையத்தை இடித்துவிட்டு புதிய ரயில் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையம், அயோத்தி நகரில் உள்ள ராமர் கோயில் போன்று கட்ட திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக மத்திய அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் கடந்த 1980களில் விஸ்வ இந்து பரிஷத் அமைத்துக்கொடுத்த ராமர் கோயில் வடிவமைப்போல் இருக்கும். இங்கு வரும் ராம பக்தர்கள், ரயில் நிலையத்துக்கு வரும்போது அது அயோத்தி ராமர் கோயில் போன்று இருக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளோம்.

அயோத்தி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் திட்டம் என்பது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலேயே ஆலோசிக்கப்பட்டது. இந்த ரயில்நிலையம் கட்டி முடிக்கப்பட்டவுடன், ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும். இவ்வாறு ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறினார்.

Leave a Reply