shadow

ரயிலில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி: அதிரடி அறிவிப்பு

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு இடையே ஒரே வரி விதிப்பு முறையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பை நடைமுறைப்படுத்தியது. இந்த வரிவிதிப்பில் பல்வேறு குழறுபடிகள் இருந்ததால் ஒருசில பொருட்களின் வரிகள் குறைக்கபப்ட்டது.

இந்த நிலையில் அவ்வப்போது நடைபெற்று வரும் ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு கூட்டத்தில் இந்த வரிவிதிப்பில் ஒருசில மாற்றங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் குளிர்பானங்கள் உட்பட உணவு பொருள்கள் மீது 5% ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு நேற்று அறிவித்துள்ளது. ரயில்கள், ரயில் நிலையங்களில் விற்கப்படும் அனைத்து உணவு பொருள்களுக்கும் ஒரே அளவிலான வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கவுன்சில் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply