மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தெலுங்கானா பிரச்சனையால் பலத்த கூச்சல் குழப்பங்கள் நிலவியதால் வெறும் 15 நிமிடங்களில் தனது பட்ஜெட் உரையை முடித்துக்கொண்டார்.  இந்த பட்ஜெட்டில் புதிதாக 72 ரயில்கள் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் அறிவித்த சில முக்கிய அறிவிப்புகளை இங்கு காண்போம்.

பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை.

* 17 கூடுதல் கட்டணம் கொண்ட பிரிமியம் ரயில், 38 புதிய விரைவு ரயில்கள் விடப்படும்.

* 10 பாசஞ்சர் ரயில்கள் அறிமுகம்

* புறநகர் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் 4 மெயின் லைன் மல்டிபிள் யூனிட் எனப்படும் 4 MEMU (Mainline Electric Multiple Unit or MEMU) ரயில்கள் விடப்படும்

* புறநகர் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் டீசல் – எலெக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் எனப்படும் 4 DMU( Diesel-electric Multiple Unit or DEMU) ரயில்கள் விடப்படும்.

* தீ விபத்தை தடுக்க ரயிலில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்படும்.

* ரயில் சமையலறையில் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படும்.

* குறிப்பிட்ட ரயில்களில் இணைய தளம் மூலம் உணவுக்கு முன்பதிவு செய்யலாம்.

* 2014-15ல் பயணிகள் பிரிவில் ரூ.45,300 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பீடு.

* 2014-51ல் சரக்கு போக்குவரத்து பிரிவில் ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு.

* கூடுதலாக அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.

* சரக்கு ரயில்களுக்கான தனி பாதைகள் மூலம் செலவுகள் குறைந்துள்ளன.

*  அதிவேக பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டியது அவசியம்.

* மேகாலாயா- அருணாச்சல்பிரதேசத்துக்கு ரயில் சேவை தொடங்கப்படும்.

* கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு அவசியம்.

* 6வது ஊதியக்குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

* 4,556 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

* நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 56 கி.மீ பாதை அதிகமாக மின்மயமாக்கம்.

* அடுத்த 4 மாதங்களுக்கான ரயில்வே செலவினங்களுக்கு ஒப்புதல்.

* காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை

* ஜம்மு காஷ்மீரில் 11.2 கி.மீ. தூரத்திற்கு குகை பாதை

Leave a Reply