shadow

Mamata08.07.14பாரதிய ஜனதாவுடன் அனுசரித்து போகாததால் மேற்குவங்க அரசை மத்திய அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்து கொள்கிறது. ஒரு மிகப்பெரிய மாநிலமான மேற்குவங்கத்துக்கு ரயில்வே பட்ஜெட்டில் ஒரே ஒரு புதிய ரயிலை அறிவித்துள்ளனர். அந்த ஒரு ரயிலையும் வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் , நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி “பாதுகாப்பு, மற்றும் ரயில்வே துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதை பாஜகவினர் ஏன் புரிந்து கொள்ளவில்லை.

பா.ஜ.க. அரசு, எங்கள் மாநிலத்தை பழிவாங்கும் போக்குடன் அணுகி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில் மேற்குவங்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்துக்கு ஒரே ஒரு ரயில், அதுவும் வாராந்திர ரயில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. நாங்கள் அமைதியாக இருப்பதாக கருதவேண்டாம். எங்கள் மக்கள் கொதித்து எழுந்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

மேற்குவங்க மக்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல, மேற்குவங்கத்திற்கு அறிவிக்கப்பட்ட அந்த ஒரு ரயிலையும் வாபஸ் பெற்றுவிடுங்கள்.  நல்லவேளையாக நான் நாடாளுமன்றத்திலோ, மேல்-சபையிலோ தற்போது உறுப்பினராக இல்லை. அது அவர்களுடைய நல்லகாலம். நான் மட்டும் இன்று நாடாளூமன்றத்தில் இருந்திருந்தால், அங்கு என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இந்த புதிய அரசு முந்தைய காங்கிரஸ் அரசைவிட எங்கள் மக்களுக்கு அதிகதுரோகம் செய்கிறாது. என்று ஆவேசமாக மம்தா பானர்ஜி பேசினார்.

Leave a Reply