27 தொடர் தோல்வி. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறார் ராகுல்காந்தி

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுமோசமாக தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த காலம் ஒன்று உண்டு. ஆனால் தற்போது விரல்விட்டு எண்ணும் அளவிற்கு வெகுசில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. உபி உள்பட 16 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது.

இந்நிலையில் ராகுல்காந்தி பொறுப்பேற்று பிரச்சாரம் செய்த தேர்தல்களில் கடந்த பத்து ஆண்டுகளில் 27 தொடர் தோல்வியை தழுவியுள்ளதாகவும் இதற்காக அவருக்கு கின்னச் சாதனை புத்தகத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு மாணவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் விஷால் திவான் என்பவரின் விண்ணப்பத்தை கின்னஸ் ஏற்றுக்கொண்டாலும் ராகுல் பெயரை சாதனையாளர் புத்தகத்தில் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *