பிரதமர் மோடிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். ராகுல்காந்தி

rahul gandhiஆங்கிலேயர் காலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்ட இன்னல்களை விட சுதந்திர இந்தியாவில் பாஜக தலைவர்கள் அனுபவித்த இன்னல்கள் அதிகம் என்று பிரதமர் மோடி நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசினார். இந்த பேச்சு காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு அதிருப்தியை அளித்த நிலையில் தற்போது இதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

டுவிட்டரில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ‘மோடிஜி உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். அசதோ மா சத் கமய, தமசோ மா ஜோதிர் கமய, மிருத்யு மா அமிர்தம் கமய. ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! அறியாமையிலிருந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து வாழ்வுக்கும் எழுச்சி பெறுக” என்று கூறியுள்ளார்.

மோடியின் பேச்சுக்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் ராகுல்காந்திக்கு மீண்டும் பதிலடி கொடுக்க பாஜக தலைவர்கள் தயாராகி வருவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *